|
Post by Admin on Aug 31, 2016 1:57:24 GMT
நான்காம் தலைமுறைக்கான அதிவேக 4ஜி இணைய சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தும் வகையில், அறிமுக சலுகையாக 4ஜி மொபைல் வைத்துள்ள அனைவருக்கும் இலவச 4ஜி சேவையை 90 நாட்களுக்கு வழங்குகிறது. இதன்படி ரிலையன்ஸ் சிம்கார்டை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்று, அதிவேகத்தில் அளவில்லாத 4ஜி இணைய சேவையை 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர அளவில்லா எச்.டி வீடியோ, குரல் அழைப்புகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ரிலையன்சின் எல்ஒய்எப், சாம்சங், எல்ஜி, மைக்ரோமேக்ஸ், பானாசோனிக், அல்காடெல், டிசிஎல், ஜியோனீ, கார்பன், லாவா, ஏசஸ், யு, சோலோ, சோனி, வீடியோகான், சான்சுய் ஆகியவற்றுக்கு ஜியோ 4ஜி சேவை வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது எச்டிசி, விவோ, இன்டக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. இதன்மூலம் 4ஜி வசதியுள்ள 19 நிறுவன மொபைல் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், ஜியோ 4ஜி மற்றும் பிரீமியம் சேவைகளை பெறலாம். மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரங்களை உரிய ஆவணங்களுடன் ரிலையன்ஸ் எக்ஸ்பிரஸ், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி உட்பட அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும், சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஷோரூம்களிலும் சமர்ப்பித்து இலவச சிம் வாங்கி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். Source Dinakaran.com
|
|